உள்ளூராட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (ஜனவரி 12) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.

யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முன்னேற்பாட்டுக் கலந்துரையாடலாக இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share this Article