இ.போ.ச. பஸ் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பளை, இத்தாவிலில் நடந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சைக்கிளில் பயணித்தவரை இ.போ.ச. பஸ் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. கோவில்காடு, இத்தாவிலைச் சேர்ந்த முத்தையா கந்தசாமி என்ற 59 வயது நபரே உயிரிழந்தவராவார்.

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸே விபத்தில் சிக்கியது. பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article