இளைஞர் கழகங்கள் இணைந்து இன்று சிரமதானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தால் சிரமதானம் மற்றும் மர நடுகை திட்டங்கள் இன்று (பெப்ரவரி 03) காலை 9.30 மணிமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

காலை 9.30 மணிக்கு ஸ்ரார் விளையாட்டு கழக மைதானம் மற்றும் வீதிகள் சிரமதானம் செய்யப்படவுள்ளன.

பி.ப. 2 மணிக்கு நெடுந்தீவு மேற்கு ஐயனார் கோவில் பகுதியில் மர நடுகை இடம்பெறும். எதிர்வரும் 12 ஆம் திகதி விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ள இடங்களும் சிரமதானம் செய்தல் என்பன இடம்பெறவுள்ளது.

இந்த சிரமதான பணிகளில் நெடுந்தீவில் உள்ள அனைத்து இளைஞர் கழகங்களும் பங்குபற்றுகின்றன.

Share this Article