வட்டுக்கோட்டையில் கொலை; சந்தேக நபர் ஒருவர் காரைநகரில் சிக்கினார்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்தகுற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்  !

கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலைபாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறைக்கும்பலொன்று கடத்திச் சென்றதோடு,  கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கிபடுகொலை செய்துவிட்டு, மனைவியை வீதியில் இறக்கி விட்டு சென்றுஇருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார்இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியநிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர்காரைநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம்பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தநடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share this Article