நெடுந்தீவில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவைநாளை !வெள்ளிக்கிழமை (ஏப். 26)

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் வேண்டுகோளிற்கமைய  மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தின்அறிவுறுத்தலின்படி நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் சாரதிஅனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது நாளை வெள்ளிக்கிழமை (ஏப். 26) நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில் இடம்பெறவுள்ளது.

விண்ணப்பதாரிகளுக்கான மருத்துவ சான்றிதழ் மற்றும் எழுத்துப் பரீட்சைஎன்பன குறித்த தினத்தில் இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் காலை 09:00 மணிமுதல் அனைத்து பதிவுகளையும் பிரதேசசெயலகத்தில் மேற்கொண்டுசேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.

சேவைபெறுனர்கள் நடமாடும் சேவையின்போது சமர்பிக்கவேண்டியஆவணங்கள், கட்டண விபரங்கள் தொடர்பான விபரம் …

தற்போது மோட்டார் போக்குவரத்து திணைக்கள நடமாடும் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளபோதும் நெடுந்தீவில் இருந்து சென்று வருதல் , தங்குதல் ஆகிய நிலைமைகளை கருத்தில் கொண்டு ஊரும் உறவும் நிறுவனத்தினர் விடுத்த எழுத்துமூலமான கோரிக்கையின் அடிப்படையில் இந்நடமாடும் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article