ஆராதனைக்கு செல்லாததால் சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை!- சிறுமி மருத்துவமனையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தாக்குதலுக்கு இலக்காகிச் சிறுமி ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு செல்லாததால் பங்குத் தந்தை சிறுமியைத் தாக்கினார் என்று கூறப்படுகின்றது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே சிறுமியைத் தாக்கினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் தந்தை கிறிஸ்தவர், தாய் சைவ சமயத்தவர் என்பதால் சிறுமி தேவாலயத்துக்கு செல்வது கிடையாது. தந்தையுடன் எப்போதாவது தேவாலயம் செல்வதுண்டு.

சிறுமியை அழைத்த பங்குத்தந்தை, தேவாலயம் வராமைக்காகத் தாக்கினார் என்று கூறுப்படுகின்றது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிறுமி இன்று(டிசம்பர் 5) மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article