வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்துள்ளார்.

17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 402 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 453 வேட்பாளர்கள் இம்முறை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறைமையின் படி 60 வீத உறுப்பினர்கள் வட்டாரங்களில் நேரடியாகவும் 40 வீதமானோர் விகிதாசார முறைமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஈ.பி.டி.பி. கட்சி வீணை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

Share this Article