வீட்டிலிருந்த மாட்டு கன்றை திருடிச் சென்று இறைச்சியாக்கிய கொடூரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு 5 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் வளர்த்த மாட்டு கன்று நேற்றுமுன்தினம்(நவம்பர் 22) மாலை களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மாட்டுக்கன்றினை உரிமையாளர் தேடியபோது இன்றைதினம் அதன் சில எச்சங்கள் வீட்டுக்கு அருகாமையில் கணப்பட்டதையடுத்து கன்று களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக வாழ்வாதாரத்திற்காக கால்நடைகள் வளர்ப்பவர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர்.

Share this Article