விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் 4 வாள்களுடன் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

விசேட அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (டிசம்பர் 21) விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நெல்லியடி, மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வீட்டில் இருந்து நான்கு வாள்களும் சட்டவிரோதமான சிகரெட் பெட்டிகளும் மீட்கப்பட்டதுடன், அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 38 வயதான சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக நடவடிக்கைக்காக விசேட அதிரடிப் படையினரால் நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article