வரணியில் கசிப்பு மற்றும் கோடா மீட்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொடிகாமம், வரணியில் 40 லீற்றர் கசிப்பும், 80 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் பரிசோதகர் மு.உதயானந்த் தலைமையிலான பொலிஸ் குழுவே நேற்று இரவு (பெப்ரவரி 12) இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

இது தொடர்பில் 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article