வடக்கு மாகாணத்தின் சுதந்திர தின நிகழ்வுகள்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75ஆவது சுதந்திர தின வடமாகாணத்துக்கான நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (பெப்ரவரி 4) “நமோ நமோ தாயே நூற்றாண்டின் முதற்படி 2023- 2048” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக மாவட்டச் செயலர் அ. சிவபாலசுந்தரன் கலந்து கொண்டார். நிகழ்வு பிரதம விருந்தினர் வருகையுடன் ஆரம்பமாகி தேசிய கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் அணிவகுப்பு மரியாதை, அக வணக்கம், சர்வ மத தலைவர்களின் ஆசியுரை, பிரதம விருந்தினர் உரை, சான்றிதழ் வழங்குதல் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள்,சாரணர் படையணி,கலாசார படையணி, தேசிய மாணவர் படையணி ஆகிய படையணிகளின் அணிவகுப்பினைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன . இறுதியாக மரநடுகை நிகழ்வுடன் விழா நிறைவடைந்தது.

Share this Article