யாழ். மாவட்ட சாரணர் கிளைச் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றார் சிவபாலசுந்தரன்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் தலைவராக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலரும், யாழ்ப்பாண சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (பெப்ரவரி 7) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன், மாவட்ட சாரணர் சங்கத்தின் உதவி மாவட்ட ஆணையாளர் திரு க.துற்ஜெயந்தன் (நிர்வாகம்), உதவி மாவட்ட ஆணையாளர் கோ.சத்தியன் (நிகழ்ச்சி), உதவி மாவட்ட ஆணையாளர் இ.ரஜீவன் (பயிற்சி), உதவி மாவட்ட ஆணையாளர் ம.ஞானசம்மந்தன், உதவி மாவட்ட ஆணையாளர் திருமதி ஈ.ஐ.தேவமித்திரன் மற்றும் மாவட்ட சாரண ஆசிரியர்கள் ந.லிங்கேஸ்வரன், திருமதி ச. வேஜின் மற்றும் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் திரு.பே.தனபாலசிங்கம், கொக்குவில் இந்துக் ஆரம்பப் பாடசாலை அதிபர் திருமதி கவின்ஜா நவஜீவா மற்றும் மாவட்ட செயலக இணைப்பாளர் பி.கஸ்ரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article