யாழ். மாவட்டச் செயலரைச் சந்தித்த பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரனை வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த குணரத்ன, யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இராணுவத் தளபதியுடனான சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக மாவடட்டச் செயலர் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் மாவட்ட மேலதிக செயலர் ம.பிரதீபன், மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share this Article