யாழ். மாநகர சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரெமீடியஸ் உயிரிழப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான முடியப்பு ரெமிடியஸ் இன்று (பெப்ரவரி 11) உயிரிழந்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி பருத்தித்துறை வீதியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரெமிடியஸ் தலையில் படுகாயமடைந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் வீதியின் குறுக்கே சென்ற நாயுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தார். விபத்தின்போது அவரது தலைக்கவசம் கழன்றதால் தலையில் படுகாயம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் இருந்தவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்

Share this Article