யாழ் போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை. குருதி வங்கியில் குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

குருதி வழங்கி நான்கு மாதங்கள் பூர்த்தியான குருதிக்கொடையாளர்களும் புதிதாக குருதிக்கொடை வழங்கக் கூடிய கொடையாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலை குருதி வங்கிக்கு வருகை தந்து குருதி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அடுத்த இரத்த தான முகாம் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதுவரைக்கும் நோயாளர்களுக்கு தேவையான குருதி போதாமையாலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article