யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (ஜனவரி 17) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு, மருந்து தட்டுப்பாடு, வரி அதிகரிப்பு என்பவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அரச வைத்தியசாலைகளில் நிலவும் அத்தியாவசிய மருந்து மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாட்டுக்கும் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Share this Article