மீன்பிடிப் படகுகள் தீக்கிரை!- மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு,கட்டுக்காடு கேவில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

சமாசத்தினால் தொழில் தடைக்காலம் அறிவிக்கப்பட்ட நிலையில் தடைகளை மீறி தொழிலில் ஈடுபட்டவர்களது இறால் கூடுகள் கற்றொழிலாளர் சமாசத்தினரால் அகற்றப்பட்டது.

இதனையடுத்து சமாச உறுப்பினர்களது மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் இனம்தெரியாத நபர்களால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்புத் தெரிவித்து மீனவ குடும்பங்கள் எதிர்பு போராட்டம் ஒன்றை இன்று கட்டைக்காடு, கேவில் சந்தி பொது நோக்க மண்டபம் முன்பாக முன்னெடுத்தனர்.

இதில் மாற்றத்திறனாளி ஒருவரது படகு மற்றும் வலைகளும் எரித்து அழிக்கப்பட்டுள்ளது.எனவே நாசகாரவேலையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும், பாதிக்கப்பட்ட மீனவர்களது வாழ்வாதாரம் மீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என கோரிக்கை விடப்பட்டது.

கடலில் இந்திய இழுவைப் படகுகளால் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது, சிறு தொழிலும் செயமுடியத நிலையுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியட்டுள்ளனர்.

Share this Article