மல்லாகத்தில் போதை மாத்திரைகளை விற்றவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மல்லாகம் புகையிரத நிலைய பகுதியில் வைத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய ஏழாலை தெற்குப் பகுதியைச் சேர்ந்த நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 250 போதை மாத்திரைகளும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Share this Article