மனக் கணிதப் போட்டியில் மலேசியாவில் சாதனை படைத்த யாழ் மாணவன்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருணன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இவர் மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் ஆறு வயதிற்குட்பட்ட பிரிவில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனும் திருநெல்வேலி Ucmas மாணவனுமான சுதர்சன், அருணன் A1 பிரிவில் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி 2 ஆம் இடத்தை பெற்றார்.

இந்த மாணவன் இலங்கையில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற நிலையில் மலேசியா கோலாம்பூரில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிக்கு செல்லத் தெரிவானார்.

நேற்றுமுன்தினம்(டிசம்பர் 2) இடம்பெற்ற சர்வதேசப் போட்டியில் 36 நாடுகளிலிருந்து பலர் போட்டியில் பங்கு பற்றிய நிலையில் அருணன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் தான் மலேசியா செல்வதற்கு உதவி செய்யுமாறு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் யாகேந்திரனிடம் நேரில் சென்று கோரியிருந்தார்.

இந்த நிலையில் பயணச் செலவுகள் முழுவதையும் தான் வழங்குவதாகக் கூறி பெற்றோர்களை அழைத்து பயணச் செலவுகளுக்கான பயணத்தொகையை அண்மையில் வழங்கியமை குறிப்பிட்டத்தக்கது.

Share this Article