மக்களை களிப்படைய வைத்த வல்வெட்டித்துறை பட்டப் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வல்வெட்டித்துறையில் வருடாந்தம் தைப் பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் மாபெரும் வினோத விசித்திரப் பட்டப் போட்டித் திருவிழா தைப் பொங்கல் தினமான இன்றும் (ஜனவரி 15) நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையமும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து இந்தப் பட்டப் போட்டியை நடத்தன.

வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத் தலைவர் சி.மோ.சிவமயம் தலைமையில் நிகழ்வுக்ள ஆரம்பமானது.

பல வடிவங்களிலான வகை வகையான பட்டங்களும், பிரமாண்ட அமைப்புக்களை உடைய பட்டங்களும் வானில் பறந்து அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

Share this Article