போலிக் கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயன்ற இளைஞன் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.

போலியான கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக கனடாவில் வசிக்கும், குறித்த இளைஞரின் உறவினர் ஒருவர் இலங்கையிலுள்ள தரகர் ஒருவருக்கு 40 லட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share this Article