பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற விற்பனை நிலையம்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற விற்பனை நிலையம் இன்று (பெப்ரவரி 11) திறக்கப்பட்டது. சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி பயணி ஒருவருடன் இணைந்து விற்பனை நிலையத்தைத் திறந்தார்.

சென்னை – பலாலி இடையிலான விமான சேவை விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது என்று தெரிவித்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி, பலாலி விமானத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்காக மேலும் பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பலாலி மற்றும் இரத்மலானை இடையிலான உள்ளூர் விமான சேவையும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று தெரிவித்த அவர், வர்த்தக ரீதியில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர் மற்றும்உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article