நெடுந்தீவு மாணவர்களுக்கு சத்துணவூட்டும் திட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவுப் பிரதேச மாணவர்களுக்கான ஐம்பது நாள்கள் சத்துணவூட்டும் திட்டம் கடந்த 11 ஆம் திகதி Ceylon community Kitchen அமைப்பால் நெடுந்தீவுப் பிரதேசத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நெடுந்தீவுப் பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதியின் நெறிப்படுத்தலுக்கு அமைவாக இந்த சத்துணவூட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நெடுந்தீவு கல்விக்கோட்ட அனைத்து பாடசாலைகளின் மாணவர்களும் பயன்பெறும் நோக்கில் இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர், விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மதகுருக்கள் , பிரதேச செயலர் மற்றும் பாடசாலை அதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நெடுந்தீவுக் கத்தோலிக்க திருச்சபை இந்தத் திட்டத்துக்கான பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

Share this Article