நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா – 2023 நேற்று (டிசம்பர் 14) மாலை பாடசாலை உள்ளக மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை நெடுந்தீவு கோட்டக்கல்வி பணிப்பாளர் கெ. அன்ரன் மரியதாஸ் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு திருப்பலியுடன் ஆரம்பமான ஒளிவிழா நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விருந்தினர்களது வாழ்த்துரைகளும் சிறப்புடன் இடம்பெற்றது.

இதன்போது பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவ, மாணவிகள் , பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article