நெடுந்தீவு பல நோ. கூ. சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் எட்வேட் அருந்தவசீலன்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பல நோ. கூ. சங்கத்தின் எதிர்வரும் 3 வருடங்களுக்கான புதிய தலைவராக திரு.எட்வேட் அருந்தவசீலன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (டிசம்பர் 10) காலை இடம்பெற்ற இயக்குனர்சபை தெரிவின்போது அதற்காக 12 பேர் போட்டியிட்டமையினால் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அதிலிருந்து 05 பேர் தெரிவு செய்யப்பட்டதுடன் கூட்டுறவுச் சட்டத்தின்படி 02 பேர் 35 வயதிற்குட்பட்ட உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்பதற்கமைய இருவர் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டு 07 பேர் கொண்ட இயக்குனர் சபை தெரிவு செய்யப்பட்டது. இயக்குனர் சபையில் இருந்து எட்வேட் அருந்தவசீலன் தலைவராகவும் கணபதிப்பிள்ளை கேதீஸ்வரநாதன் உப தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இயக்குனர் சபை விபரம்
தலைவர் – திரு. எட்வேட் அருந்தவசீலன்
உப தலைவர் – திரு. கணபதிப்பிள்ளை கேதீஸ்வரநாதன்

உறுப்பினர்கள் விபரம்
01. திருமதி.கிருஷ்ணதாஸ் சாரதாதேவி
02. திரு. கனகராசா அரசரட்ணம்
03. திரு. சோமலிங்கம் தம்பிராசா
04. திருமதி. கந்தையா அனு
05. திரு.அருள் ஞானராஜ் நிதர்சன்

 

Share this Article