நெடுந்தீவு குழந்தை இயேசு முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு குழந்தை இயேசு முன்பள்ளியின் மாணவர் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வானது நேற்றைய தினம் (மே 25) தூய சவேரியார் ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக வண. பங்குத்தந்தை வசந்தன் அடிகளாரும், சிறப்பு அதிதிகளாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளைத் தலைவர் எ. அருந்தவசீலன், முன்பள்ளிகளின் இணைப்பாளர் வசந்தசகாயராணி மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஜெனற் ஜான்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு இடையிலான மகிழ்வூட்டும் விளையாட்டுக்கள் இடம்பெற்று பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர், முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article