நெடுந்தீவு இளைஞர் கழக சம்மேளனத்தால் சிரமதானமும் மரநடுகையும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தால் சிரமாதானம் மற்றும் மர நடுகை நிகழ்வுகள் நேற்று (பெப்ரவரி 3) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றன.

ஸ்ரார் விளையாட்டுக் கழக மைதானம் மற்றும் அதனை சென்றடையும் வீதிகள் சிரமதானம் செய்யப்பட்டதுடன் நெடுந்தீவு மேற்கு ஐயனார் கோவில் பகுதியில் மர நடுகையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் நெடுந்தீவுப் பிரதேசசெயலர், இளைஞர் விளையாட்டு அலுவலர், சமுர்த்தி அலுவலர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் நெடுந்தீவிலுள்ள இளைஞர் கழக அங்கத்தினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article