நெடுந்தீவில் திருச்சிலுவைப் பாதை தியானம் எதிர்வரும் 24 ஆம் திகதி!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தவக்காலத்தின் முதலாவது திருச்சிலுவை பாதை தியானமானது நாளை மறுதினம் (பெப்ரவரி 24) வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது என்று நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை அறிவித்துள்ளது.

ஆசீர்வாதப்பர் இளையோர் ஒன்றியம் மற்றும் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலேயே இந்தச் சிலுவைப்பாதை தியானம் இடம்பெறவுள்ளது.

இந்தச் சிலுவைப்பாதை தியானம் மாலை 04:30 மணிக்கு கொம்பனி வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கடற்கரை வழியாக கலாசார மண்டபக் கடற்கரை வீதியை சென்றடைந்து நிறைவில் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக அவ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article