நெடுந்தீவில் உணவு கையாளுகை தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உணவு கையாளுகையில் ஈடுபடுபவர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு நெடுந்தீவு பிரதான நூலகத்தில் நேற்று (பெப்ரவரி 8) இடம்பெற்றது.

நெடுந்தீவுப் பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற இந்த தெளிவூட்டல் கருத்தரங்கில் பொதுமக்களுக்கான உணவு கையாளுகையில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் மற்றும் வர்தகர்களும் கலந்துகொண்டனர்.

புதிய உணவுச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல், உணவு உற்பத்தி மற்றும் விற்பனையின் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பான தெளிவூட்டல் மற்றும் ஆலோசனையும் இதன்போது வழங்கப்பட்டன.

நெடுந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்தரங்கில் பிரதேசசபையின் செயலாளர் மற்றும் வர்தகர்களும் கலந்தகொண்டிருந்தனர்.

Share this Article