நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மல்லாகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மல்லாகம் ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஏழாலை தெற்கைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து கைபெற்றப்பட்ட 250 போதை மாத்திரைகள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Article