நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நேற்று (டிசம்பர் 4) திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்தார்.
இந்நிலையில் குறித்த நபர் நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

அதனை அடுத்து நபரை கைது செய்த, நீதிமன்ற பொலிஸார் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

சந்தேக நபரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபரை, சட்டவைத்திய அதிகாரியின் முன் முற்படுத்தி, பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.

அதேவேளை குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மது போதையிலையே குழப்பத்தை ஏற்படுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.

Share this Article