நல்லூர்க் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா இன்று!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை (பெப்ரவரி 4) இடம்பெற்றது.

இந்த நெற்புதிர் அறுவடை விழா வருடந்தோறும் தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் செல்வார்கள்.

அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் செய்வார்கள்.

அதே போன்று இம் முறையும் பூசைகள் இடம்பெற்று பக்தர்களுக்கு அமுது வழங்கி கொண்டாடப்பட்டது.

இப் புதிர் விழா 289 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டுள்ளது.

Share this Article