திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த இளம் குடும்பப் பெண்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழில் திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்று(டிசம்பர் 13) உயிரிழந்துள்ளார்.

உடுவில் – கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே  உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண்ணிற்கு திருமணமான நிலையில் அவரது கணவர் புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார்.

குறித்த பெண்ணுக்கு கடந்த 11ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இதன்போது அவர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share this Article