சிவத்தமிழ் செல்வியின் பிறந்தநாள் அறக்கொடை விழா 7 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிவத்தமிழ் செல்வியின் 99 ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா எதிர்வரும் 07 ஆம் திகதி காலை 9.00 மணி தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த அறக்கொடை விழாவில் ஐந்து பெருந்தகைகள் சிவத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

பேராசிரியர் சி. சிவலிங்கராஜா, வைத்திய கலாநிதி. சி. அருளானந்தம், இளைப்பாறிய விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வநாயகம், நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரன், இளைப்பாறிய அதிபர் மு.அருணாசலம் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article