சிறப்புற நடந்த நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியின் ஒளி விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியின் ஒளி விழா 2023 நிகழ்வு முன்பள்ளியின் நிர்வாக தலைவர் திருமதி நிரோஜன் ஜெனிதா தலைமையில் நேற்று (டிசம்பர் 11) நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளாரும் ஏனைய அதிதிகளாக அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார், அமல மரித்தியாகிகள் துறவறசபையின் அருட்பணி ஜோகராஜ் அடிகளார், அருட்பணி யூஜின் அடிகளார்,நெடுந்தீவு திருக்குடும்ப கன்னியர் மட முதல்வர் அருட்சகோதரி லுமினா போல்ராஜ், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளையின் தலைவர் எட்வேட் அருந்தவசீலன், நெடுந்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் நெறிப்படுத்தலில் சிறப்புற இடம்பெற்ற சிறார்களின் கலைநிகழ்வுகள் மற்றும்
மாணவர்களுக்கான நத்தார் பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

 

Share this Article