சமூக பாதுகாப்பு சபை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான பாதுகாப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 100 மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா முதல் 50 ஆயிரம் ரூபா வரையான புலமைப் பரிசிலுக்கான காசோலைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

கடற்றொழில் அமைச்சர் தேவானந்தா, வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் மு.நந்தகோபாலன், யாழ். சனச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் தி.லக்ஷன், யாழ். அரிமாக் கழகத் தலைவர் லயன் கு.ஜெயந்தன், நல்லூர் அரிமாக்கழகம்
தலைவர் லயன் ர.பாலரூபன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share this Article