சட்டத்தரணி ரெமீடியஸ் விபத்தில் படுகாயம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான மு.ரெமீடியஸ் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் இந்த விபத்து இன்று மாலை (பெப்ரவரி 8) நடந்துள்ளது.

வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் சட்டத்தரணி பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது அவரது தலைக்கவசம் கழன்றதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதியில் நின்றவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யாழ் போதனா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

Share this Article