கொடிகாமத்தில் முதியவரின் சடலம் மீட்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொடிகாமம், கெற்பேலியில் 60 வயது முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (டிசெம்பர் 29) காலை மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இரவு உறவினர்கள் தேடிச் சென்றபோது, வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள நீரேரியில் அவரது சடலம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலம் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article