கைதடி கிழக்கு சன சமூக நிலையத்தில் ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்.கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் ஆறுமுகநாவலர் ஆண்டுவிழாவை வெகு விமர்சையாக நடத்தியது.

கைதடி கிழக்கு சன சமூக நிலையத்தில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. இதன்போது நாவலரின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

‘இன்றைய சமூகம் நாவலர் காட்டிய வழியில் பயணிக்கிறதா, இல்லையா’ என்ற பட்டிமன்றம் மற்றும் ‘வள்ளி திருமணம்’ இசை நாடகம் என்பனவும் மாணவர்கள் மத்தியில் இடம்பெற்றன.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

Share this Article