கடற்றொழில் அமைச்சரை சந்தித்த ராகேஸ் நடராஜன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் தூதரக துணைத் தூதுவர் ஜே.ராகேஸ் நடராஜன் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்று (ஜனவரி 12) கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்திய அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

Share this Article