எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்த நாள் நிகழ்வுகள் யாழில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நடிகரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்த தினம் இன்று (ஜனவரி 18) யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

யாழ்பபாணம், குருநகரில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு முன்பாக குருநகர் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

எம்.ஜி.ஆர். நினைவுக் கல்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திரைநீக்கம் செய்தார். அறிஞர் அண்ணா நினைவுக் கல்லை முன்னாள் யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் திரை நீக்கம் செய்தார்.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு நற்பணி மன்றத்தால் பொருளாதார ரீதியில் நலிந்த 15 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

Share this Article