இன்பச் சோலை கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வட்டு தெற்கு ஜே-165 கிராம சேவகர் பிரிவில் இன்பச் சோலை கிராமத்தில் Avanka Lanka Foundation(Love Jaffna) நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்ட வீடு நேற்று (2.1.2024) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

பிரதேச செயலர் திருமதி. கவிதா உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த வீட்டினை நிர்மாணம் செய்வதற்கு உதவிய படையினரும் படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அத்துடன் சங்கானை பிரதேச செயலக பிரதி திட்ட பணிப்பாளர் தர்சினி அப்பகுதி கிராம சேவகர் எஸ். சிவகுமார் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. தனுஷா Avanka Lanka Foundation நிறுவனத்தின் பணிப்பாளர் லசந்த மெண்டிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this Article