இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இந்தியாவின் 74ஆவது குடியரசு தின நிகழ்வு இந்திய கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விசேட நிகழ்வு இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச திணைக்களங்களின் தலைவர்கள் முப்படைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குடியரசு தின நிகழ்வின் விசேட நிகழ்வாக இந்திய கலைஞர்கள் பங்குபற்றிய ரிதம் ஒப் காமணி எனும் இலங்கை இந்திய நட்புறவு அன்பைப் பறைசாற்றும் வகையில் இந்திய கலைஞர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் அடங்கிய விசேடஇசை நிகழ்வும் நடைபெற்றது.

Share this Article