ஆலமாவன கலைக் குழுமத்தின் திருவாசகப் போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு ஆலமாவன சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மார்கழி ஆருத்ரா தரிசன திருவெம்பாவை மஹோற்சவத்தை முன்னிட்டு ஆலமானவன கலைக்குழுமத்தால் திருவாசகப் போட்டிகள் 07 பிரிவுகளில் நடாத்தப்படவுள்ளது.

தரம் 01 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு 06 பிரிவாகவும் 07 ஆவது பிரிவாக திறந்த போட்டியும் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டு பணப் பரிசில் வழங்கப்படவுள்ளது.
போட்டிகள் அனைத்தும்
28.12.2023 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு ஆலமாவன சித்தி விநாயகர் தேவஸ்தான மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முதலாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாவும், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

Share this Article