ஆசிரிய வெற்றிடத்துக்கான பரீட்சை திகதிகளில் மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலப் பாடங்களில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, எதிர்வரும் 16 ஆம் திகதியன்று நடாத்தப்படவிருந்த இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு (அ) தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை குறித்த தினத்தில் நடாத்தப்படமாட்டாது என வடமாகாணபொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பரீட்சை நடாத்தப்படவுள்ள புதிய திகதி பற்றிய அறிவித்தல் மிக விரைவில் அறியத்தரப்படும்.

பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் தமக்கு ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ள அனுமதி அட்டைகளையே புதிதாக தீர்மானிக்கப்படும் திகதியிலும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், அவற்றைப் பாதுகாப்பாகப் பேணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

Share this Article