வேட்புமனுத் தாக்கல் செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு வேதனம் – சுற்றுநிருபம் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு கையளித்த அரச பணியாளர்களுக்கு வேதனம் வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவின் கையொப்பத்துடன் இந்த சுற்றுநிரூபம் வெளியாகியுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அனுப்பும் வகையில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பு மனு கையளித்துள்ள அரச சேவையாளர்களுக்கு கடந்த ஒன்பதாம் திகதி முதல் இந்த மாதம் 25 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதி வரை வேதனத்துடனான விடுமுறையாக கருதி அவர்களுக்கான அடிப்படை வேதனத்தை வழங்க வேண்டும் என்று அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article