விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் சிக்கிய இலங்கையர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

துப்பாக்கியுடன் பஹ்ரேன் செல்ல முயன்ற ஒருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே நேற்று(பெப்ரவரி19) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என்று விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரது உடமைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பொலிஸாருக்கு இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article