வாள்களுடன் வன்முறைக் கும்பல் அட்டகாசம்!- புலனாய்வுத் துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியா, வைரவப்புளியங்குளத்தில் வன்முறைக் கும்பல் ஒன்று வாள்களுடன் அட்டகாசம் செய்த நிலையில், அதைத் தடுக்கச் சென்ற புலனாய்வுத் துறை உத்தியோகத்தர் மீதும் அந்தக்குழு தாக்குதல் நடத்த முயன்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று(ஓகஸ்ட் 9) மாலை வைரவப்புளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் முன்பாக நடந்துள்ளது.

மைதானத்தின் முன்பாக வீதியில் நின்ற சில இளைஞர்கள் மீது, மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். பின்னர் அந்தப் பகுதியில் வாள்களுடன் நின்று அட்டகாசம் செய்துள்ளனர்.

இதனால் வீதியால் பயணித்த மாணவர்கள், பெற்றோர், மக்கள் அச்சத்துடன் சிதறியோடினர். சம்பவத்தையறிந்து , அந்தப் பகுதிக்கு வந்த புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் ஒருவர் அந்த இளைஞர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது, அவர் மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அந்தப் பகுதிக்கு பொலிஸார் வந்தபோது, வாள்களுடன் நின்று அட்டகாசம் செய்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியாப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article