வாகன விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (நவம்பர் 6) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நெடுங்கேணியில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனமும், ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து நெடுங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஒலுமடு நெடுங்கேணிப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பழனியாண்டி தியாகராசா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளவராவார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக ஹயஸ் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share this Article