வாகன விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புத்தளம் – திருகோணமலை,ஏ-12 வீதியின் 18 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் பலியாகினர்.

புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி அவர்கள் பயணித்த உந்துருளி, கனரக வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் பயணித்த, கப் ரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று(ஜூன் 3) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், திம்பிரிகஸ்கட்டுவ மற்றும் ஹொரகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 21 மற்றும் 22 வயதான இருவரே உயிரிழந்தனர்.

Share this Article